வியாழன், 19 நவம்பர், 2009

Complex algorithm for deciding which cricket team you support?






















This is written in the new 11th generation highest level programming language called F--
so if you do not understand it, please immediately compose and send a mail to billgates@microsoft.com

program begins:
//TV is case sensitive long variable
//Neo or Star or ESPN or tensports

var CAUTION:-
// Neo cricket always boasts about indian players
//such as sachin is god, shewag is leopard, dhoni is fire
//but finally india loses even in home grounds
//so be aware of diversions and false predictions


call bat(); ball(); field();

define var useless: IND; SL; AUS; PAK; SA;

if (SL Vs. IND)
line 1: then directly support SL; //devil nearby is better than fox faraway

if(SL Vs. AUS)
think 2 minutes and 30 sec exactly;
AND if (ponting is biting nails and spitting on his palm) =>
have some mercy; //because AUS is going to lose the match

elseif
support SL;

if(SL Vs. PAK)
goto Line 1 //exactly same comment

if (SL Vs. SA)
void (OMG)
//it's a pity to see SA playing for spin balling
//how much they play - they lose at the end

program TERMINATION;

(c) all rights reserved




ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

ராகுல் திராவிட்டும் தமிழும்












இந்தியாவின் தூண் எனும் திராவிட்டை தெரியாதவர் இருக்க முடியாது. அவர் தமிழுக்கு அளித்த பங்களிப்பு என்ன என்பது தான் இங்கு கேள்வி?

தமிழ் மொழி தென் இந்தியாவை சேர்ந்தது. அது உண்மையில் திராவிட மொழி குடும்பத்தில் ஒன்று. மலையாளம் கூட அந்த வகை தான். சிலரின் கருத்துப் படி பழைய தமிழ் மொழியானது , நவீன தமிழ் ஆகவும் கேரளா மாநிலத்தில் மலையாளமாகவும் தோற்றம் பெற்றதாக கூறுவார்.

இது இவ்வாறு இருக்க, பிரெஞ்ச் மொழியை தமிழில் 'காதல் மொழி ' என பலர் கூற கேள்விப் பட்டு இருக்கிறேன். நான் அதற்கு காரணமாக நினைத்தது : அதில் அகநாநூறுகள் பல இருப்பதனால் என்று. தமிழ் அந்த நிலையை அடைய நான் தான் முயற்சி செய்ய வேண்டும் என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். (சில அடியார்கள் தமிழை பக்தி மொழி என்பர் )

ஆனால் இங்கு நடந்தது சிறிய மொழி பெயர்ப்பு தவறு என்பது தான் எனது கருத்து.

பிரெஞ்ச்சு மொழி இலத்தீன் மொழி கூட்டத்தை சார்ந்தது. அது உட்பட ஸ்பானிஷ், இத்தாலிய மொழிகளை 'Latin Languages' - Romance என்பர். romance என்பதற்கு காதல் எனும் அர்த்தம் இருப்பதால் பிரெஞ்ச்சு மொழி "காதல் " மொழி ஆனது.











இதன் படி கர்நாடகாவை சேர்ந்த ராகுல் திராவிட்டுக்கும் திராவிட மொழியான தமிழுக்கும் ஒரு முடிச்சு போடுவோமா?

சனி, 12 செப்டம்பர், 2009

What you see is NOT what you get

எனக்கு தெரிந்த தமிழில் இதனை இப்படி சொல்லலாம்:
நீங்கள் பார்ப்பது வேறு; பெறுவது வேறு;

WYSIWIG என்ற சொல் உண்மையில் GUI மற்றும் Printing தொழில்நுட்பம் சம்பந்தமானது.
முன்னர் நாம் கணினி திரையில் காண்பது வேறு , தாளில் பெறுவது வேறு என்பதாக இருந்தது. பின்னர் அது மாறி கிடைத்தது தான் WYSIWYG. ( விசிவிக் என்று வாசிக்க )

ஆனால் இப்போது இங்கு சொல்ல போவது அதுவல்ல. சில தொழில்நுட்பங்களின் உதவியால் நாம் எல்லாவற்றையும் இலகுவாக கருதி விடுகிறோம். ஆனால் உண்மையாக நடப்பதோ எம்மால் முடியாத, கடினமான ஒன்றாகத் தான் இருக்கும். என்ன, ஒன்றும் புரியவில்லையா?

இதற்கு மிக மிக சிறந்த உதாரணம்:
கிரிகெட் விளையாட்டில் LBW (கால் விக்கெட்டின் முன்னால்) out என்பது மிக மிக கடினமான தீர்ப்புகளில் ஒன்றாகும். அதாவது , Hawk Eye எனும் எதிர்வுகூறும் நுட்பம் மூலம் காலில் பட்ட பந்தின் மறைக்கப் பட்ட பாதை எதுவாக இருக்கும் என்பதுடன் மட்டும் கணினியின் கடமை முடிந்து விடுகிறது. அதற்கு மேலும் சென்று , extrapolation algorithm களை தருவிக்க முடியாது என்பதல்ல கேள்வி. அதை நம்ப முடியுமா?

ஏன் என்றால் , LBW out என்பது மிக சிக்கலான மனித மதிப்பீடுகளை உள்ளடக்கியது. அவை சில:
* leg stump இற்கு அப்பால் பந்து விழுந்தால் LBW இல்லை
* off stump இற்கு அப்பால் விழ முடியும்
* batsman move பண்ணுவதை கவனிக்க வேண்டும்
* முழங்கால் இற்கு மேல் என்றால் LBW இல்லை
* batsman play பண்ண எத்தனித்திருந்தால் அதற்கு compensate செய்ய வேண்டும்
* இப்படியே செல்லும் ...

ஆனால் கதிரையில் இருந்து கடலை சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் எங்களுக்கு இது ஒரு ஈசி வேலை. ஒன்று Instant Replay வசதி; umpire என்றால் இரண்டாம் தரம் பார்க்க முடியாது.

Umpire's view













TV viewer's perspective













இரண்டாவது , இந்த கட்டுரையின் முக்கிய அம்சம்;
umpire நின்று பார்க்கும் view வேறு; நாங்கள் TV இல் பார்க்கும் view வேறு.

ஞாயிறு, 21 ஜூன், 2009

இடிதாங்கி மனிதன் - பாகம் 01

இந்த சிறுகதையானது கேமன் மெல்வில் என்பவரால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப் பட்டது. அதன் மூலம் ஆங்கிலம் என்பதால் அது தமிழில் மொழிமாற்றப்பட்டு உங்களுக்கு தரப் படுகிறது.







இடிதாங்கி மனிதன் - ஆங்கில சிறுகதை -
தமிழ் மொழி பெயர்ப்பு by ரமிலன்
மூலம் : The Lightning-Rod Man by Herman Melville (1819-1891)





என்னவொரு வழக்கத்துக்கு மாறான இடிமுழக்கம் இன்று என நான் நினைத்துக் கொண்டேன். அந்த மலைத் தொடர்களுக்கு மத்தியில் அமைந்திருந்த எனது வீட்டின் சூட்டடுப்பின் நெருப்புக்கு அருகில் (குளிருக்காக) நின்று கொண்டிருந்த எனக்கு மின்னல் என் கூரைக்கு மேலே பரந்து, அருகிலுள்ள மலைப் பள்ளத்தாக்குகளில் விழுந்து வானமெங்கும் கிளைகள் போன்று விரிந்து, சரிவாகக் கொட்டும் அடைமழைக்கு நடுவில் , ஈட்டி போன்று எனது தாழ்ந்த கூரையை பயமுறுத்தியது. இதைவிட சம வெளியில் நின்றிருந்தால் இந்த பயம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என நான் நினைத்து கொண்டேன்.

அந்த நேரம் யாரோ கதவருகில் நிற்கும் சத்தம் கேட்டது. இடி மின்னல் நேரமாகப் பார்த்து இந்நேரம் வீட்டைத் தட்டுவது யாராக இருக்கும்? அந்த மனிதன் கதவை அதற்குரிய தடியால் தட்டாமல் பாரிய சத்தத்துடன் பலவீனமான இந்த கதவை உடைக்கிறானே.

'வணக்கம் ஐயா' என்றான் அந்த புதியவன்.

'தயவு செய்து அமர்ந்து கொள்' என்றேன் நான்.

அவன் கையில் கொண்டு வந்திருக்கும் அந்த நூதனாமான கைப்பிடி என்னவாக இருக்கும்?

'இன்று நல்ல இடி மின்னல் தான், ஐயா'.

நல்ல இடிமுழக்கமா? , தாங்க முடியாமல் இருக்கிறதே என்றேன்.

நீ நனைந்திருக்கிறாய். இந்த சூட்டடுப்பின் அருகில் நின்று கொள் என்றேன்.

'ஒரு போதும் மாட்டேன்' என்றான்.

அவன் எனது குடிசையின் நடுவிலே நின்று கொண்டிருந்தான். ஒருவிதமான சந்தேகத்துடன் நோக்கவைத்தது அவனது உருவம் . கறுத்த தலைமயிருடன் புருவங்களுக்கு மேலே ஒரு பெரிய அடையாளம் அவனுக்கு. அவனுடைய தாழ்ந்து போன கண்களை சுற்றி நீல நிற கருவளையங்கள் ஆபத்தில்லாத மின்னல் வெளிச்சம் போலிருந்தது; இடி முழங்காத மின்னலைப் போல. அவன் முழுவதுமாக நனைந்திருந்தான். மழையால் ஒழுகியிருந்த குடிசை நிலத்திலே அவன் இன்னும் நின்று கொண்டிருந்தான். அவனுடைய நூதனமான கைப்பிடி மட்டும் அருகில் சாத்தி வைக்கப் பட்டிருந்தது.

அது நான்கு அடி நீளமான ஒரு பளபளப்பான செப்புக் கோல். நீளப் பக்கமாக அது ஒரு மரக்கோலுடன் இணைக்கப் பட்டு இரண்டு செப்பால் சுற்றப்பட்ட கண்ணாடிக் கோளங்களுடன் பொருத்தப் பட்டிருந்தது. அந்த உலோகக்கோல் முடிவில் கூரான முக்காலி வடிவமாக மின்னியது. அவன் அதன் மரப் பிடியை மட்டும் பிடித்து கையில் வைத்திருந்தான்.

ஐயா, என்றபடி நான் தலை தாழ்த்தி பணிவுடன் கூறினேன்: "எனக்கு அந்த மழை மின்னலுக்கு அதிபதியான மதிப்புக்குரிய வியாழ பகவானை சந்திக்கும் பாக்கியம் இருக்கிறதா? " அவன் அதே போல, மின்னலை கையில் ஏந்தி நிற்கும் பழைய கிரேக்க தெய்வம் போன்று தெரிந்தான். நீ அந்த கடவுளாகவோ அல்லது அவரின் தூதுவராகவோ இருக்கலாம்; எப்படியும் உன்னால் எங்கள் மலைகளில் உருவாக்கப்பட்ட இந்த இடிமின்னலுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். இதை கேட்டுக்கொள்: அவை சாதாரண ஓசைகள் அல்ல. அப்படியான சக்தியினையும் ஆற்றலையும் விரும்புவனுக்கு, இடியை பிறப்பிக்கும் கடவுளை தனது குடிசையில் வைத்திருப்பது சந்தோசம். ஆனால் தயவு செய்து, முதலில் அமர்ந்து கொள். நான் தரும் இந்த உடைந்து போன கதிரை, உன்னைப் போன்ற கடவுளுக்கு ஒரு நாளும் சமமாகாது. என்றாலும் மதிப்பை பார்க்காது உட்கார்.

நான் இவ்வாறு இனிமையாக பேச, அந்த புதியவன் ஒருபுறம் அதிசயத்துடனும் மறுபுறம் ஒருவித திகிலுடனும் என்னை பார்த்தான் ஆயினும் சிறிது கூட அசையவில்லை.

'ஐயா, தயை கூர்ந்து இங்கே வந்து அமருங்கள். இல்லாவிடின், உங்களை உலர்த்திவிட்டு மீண்டும் செல்ல முடியாது அல்லவா', என்றேன்.

ஈரப்பதனை தணிப்பதற்காக சிறிய நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் அந்த சூட்டடுப்பினருகிலே, ஒரு கதிரையை வரவேற்கும் பாங்கில் போட்டேன். அது புரட்டாதி மாதமாகையால் குளிர் அவ்வளவாக இல்லை.

அவன் அதற்கு, 'ஐயா, என்னை மன்னியுங்கள். உங்கள் வரவேற்பை ஏற்றுக்கொள்வதை விட, உங்களை எச்சரிக்கிறேன்; என்னுடையதை ஏற்றுக்கொண்டு இந்த குடிசையின் மத்திக்கு வாருங்கள்; கடவுளே, இன்னொரு முறை பலமாக மின்னுகிறதே - ஐயோ அந்த அடுப்பை விட்டு விலகுங்கள்', என்று அவன் உரக்கக் கூறினான்.

நீங்கள் இவ்வளவு அலட்சியமானவரா? இப்படியான பாரதூரமான தருணத்தில் - ஒரு வீட்டின் அபாயமான பகுதி- இந்த குளிர்காயும் சூட்டடுப்பு என்று உங்கலுக்கு தெரியாதா? என்றான் அந்த மனிதன்.

"இதை நான் அறியவே இல்லையே!" , என்றேன் அமைதியாக.

அந்த புதியவன் இப்போது ஒரு பெரிய புத்திமதி கூறிய மகிழ்ச்சியில் இருந்தாலும், நான் மீண்டும் என்னையறியாமல் அடுப்புக்கருகில் செல்ல, ஒருவித தயக்கத்தில் இருந்தான். நான் அங்கு என்னால் முடிந்தளவு நிமிர்ந்தும் உறுதியாகவும் நின்றேன். ஆனால் எதுவும் பேசவில்லை.

ஒரு புது விதமான எச்சரிக்கை கலந்த பயமுறுத்தலுடன் அவன் இப்போது கத்தினான். கடவுளுக்காகவாவது , அந்த இடத்தை விட்டு விலகுங்கள்; உங்களுக்கு தெரியாதா, சூடான காற்றும் நிலக்கரியும் மின்னலை கடத்துமென்று. நான் உங்களுக்கு ஆணையிடுகிறேன் என்றான்.

ஐயா - மழைக் கடவுளே! என்னுடைய வீட்டில் எனக்கு யாரும் கட்டளையிட்டு எனக்கு பழக்கமில்லை! என்றேன் நான்.

என்னை அந்த ஆதி காலப் பெயரால் அழைக்க வேண்டாம். இப்படியான பயங்கரமான தருணத்தில் இப்படி கடவுளை அவமதிக்க கூடாது, என்றான் அந்த புதியவன்.

ஐயா தயவு செய்து தாங்கள் வந்த விடயத்தை கூற முடியுமா? இந்த புயலில் இருந்து பாதுகாப்பு தேடி வந்திருந்தால் - பணிவாக நடந்தால் , இடமுண்டு. ஆனால் வேறு விடயமாக வந்திருந்தால் அதை கூறுங்கள். நீங்கள் யார்?

'நான் இடிதாங்கி விற்கும் ஒருவன்' என்றான் அவன் மெல்லிய குரலில். எனது சிறப்பு என்னவென்றால் - கடவுளே! அட என்னவொரு இடி! - எப்போதாவது மின்னல் விழுந்திருக்கிறதா உங்களுக்கு மேல் - அதாவது உங்கள் வீட்டுக்கு அண்மையில்? இல்லையா? இப்படியான ஒன்று பொருத்தப்படுவது தான் நன்று! தனது உலோகப் பிடியால் நிலத்தைத் தட்டியவாறு, "உண்மையில்- இடி மின்னலை தாங்கும் பலமான கோட்டை என்று எதுவும் உலகில் இல்லை; ஆனால், இந்த குடிசையையும் இந்த கோலினால் பலமாக மாற்றலாம்", என்றான்.

சரி. உனது சிறப்பு வேலையைப் பற்றி கூற மறந்து விட்டாயே!

'நாடு முழுவதும் சென்று இடி தாங்கி விற்பதற்கான கட்டளைகளை பெறுவது தான் அந்த சிறப்பு வேலை'. 'இது தான் எனது மாதிரி கோல்' என்றான் அந்த கோலை தட்டியபடி. எனாகு மிகச் சிறந்த அனுபவமும் இருக்கிறது. சென்ற மாதத்தில் மட்டும், கிறிகனில்
(* ஒரு ஊர்) ஐந்து கட்டிடங்களில் 23 கோல்களை பொருத்தியிருக்கிறேன்.

இங்கே பார்! அங்கு தானே கடந்த வாரம் - சனிக்கிழமை நள்ளிரவு அந்த ஆலயத்தின் கோபுரம், அந்த பெரிய எல்ம் மரம் மற்றும் கூரையில் மின்னல் விழுந்தது? உன்னுடைய இடிதாங்கிகள் ஒன்றும் அங்கு இருக்கவில்லையா?

"கூரையிலும் மரத்திலும் இருக்கவில்லை - ஆனால் கோபுரத்தில் பொருத்தியிருந்தேன்."

“அப்படியானால், அதன் பயன் தான் என்ன?”

அதுவா? வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான பிரயோசனம்! ஆனாலும் என்னுடைய வேலையாளின் கவனக்குறைவும் கூட காரணம்! அதை அவன் கோபுரத்தில் பொருத்திய போது அதன் ஒரு பகுதி உலோகக் கூரையில் உரசியதால் தான் அந்த விபத்து. அது அவனுடைய பிழை- எனதல்ல!

பரவாயில்லை. அந்த பெரிய சத்தத்தினை இங்கே கூட கேட்கக் முடிந்தது. கடந்த ஆண்டு மொன்றியலில் (*இடம்) நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டாயா? கட்டிலில் இருந்த ஒரு வேலைக்கார சிறுமியை மின்னல் தாக்கியது! அவள் கையில் உலோகத்தாலான மணிமாலை ஒன்று இருந்தது தான் காரணம்! உனது வேலைத் தளங்களில் கனடாவும் ஒன்றா?
இல்லையே, நான் கேள்விபட்டது அவர்கள் அங்கே பாவிப்பதெல்லாம் இரும்பு கோல்கள். அவர்கள் செப்பாலான எனது கோல்களைத் தான் பாவிக்க வேண்டும். இரும்பு இலகுவில் உருகிவிடும். அந்த கோல்கள் மிக மெல்லியதாக செய்யப்படுவதால் மின்னோட்டத்தை கடத்துவதற்கு தேவையான அளவில் இருப்பதில்லை. அதனால் அந்த கோல் உருக, கட்டடம் சேதமாகிறது. என்னுடைய செப்பு கோல்கள் அப்படியானவையல்ல. அந்த கனடா தேசத்து மக்கள் அறிவிலிகள்; அவர்கள் சிலர் அதை பிழையாக பொருத்துவதால் அது மின்னலை நிலத்துக்கு கடத்தாமல் வெடித்து சிதறுகிறது. ஆனால் எனது உண்மையான இந்த கோலை பாருங்கள்; ஒரு அடி கோல் ஒரு டொலர் மட்டுமே.

இப்படி இன்னொருவர் பொருளைப் பற்றி சொல்வது உனக்கு நல்லதல்ல.

இங்கே! இடிச்சத்தம் மெல்ல மெல்ல அதிகரிக்கிறது. அது எங்களையும் நிலத்தையும் அண்மிப்பதை காட்டுகிறது. இதோ, இன்னொரு சத்தம். அருகில் நெருங்க நெருங்க இடிச்சத்தங்கள் இணைந்து ஒரே ஒலியாக கேட்கும். அங்கே! மறுதரம் ஒரு கீற்று!

அவன் சடுதியாக தன் கையிலிருந்த கோலை வைத்துவிட்டு, யன்னல் பக்கமாக சென்று, தன் வலக்கை விரல்கள் இரண்டால் மணிக்கட்டை அழுத்துவதை பார்த்ததும் - நான் 'என்ன நடந்தது?' என்றேன்.

நான் அதை கூறி முடிக்கவும் அவன் வியப்புடன் கூறினான்:

ஆ! மீண்டும் அதே முழக்கம். மூன்று நாடித்துடிப்பு நேரம் என்பதால் மூன்றிலொரு மைலுக்கும் குறைவான தூரம், அதோ - அந்த மரக் கூட்டத்துக்குள்ளே! நான் வரும் வழியில் அப்போதே வெட்டிய உயர்ந்த மூன்று தேக்கு மரங்களை கண்டேன்! அதன் உள்ளேயுள்ள திரவத்தில் இரும்பு இருப்பதால், வேறு மரங்களை விடவும் தேக்க மரங்கள் மின்னலை கவரும். உங்கள் நிலமும் தேக்கு மரத்தாலானது தானே?


ஆமாம், செறிவான தேக்காலானது. நீ இங்கு வந்த தனித்தன்மையான நேரத்திலிருந்து, நீ உனது பயணத்துக்கு பயங்கரமான வானிலையை தெரிவுசெய்கின்றதாக நினைக்கிறேன். இடி முழக்கமானது சத்தமிடும்போது , அந்த நேரங்களையெல்லாம் நீ வியாபாரம் செய்யும் சாதகமான காலங்களாக்கி விடுகிறாய்.

"அங்கே! அதே கெடுதியான சத்தம் மீண்டும்".

மற்றவருக்கு இப்படியான விடயங்களை கொடுத்து பயத்தை போக்கும் நீ மட்டும் கோழையாக இருக்கிறாயே!

சாதாரண மனிதரெல்லாம் பயணம் செய்வதற்கு நல்ல வானிலையை தேர்வு செய்வார்கள். ஆனால் நீயோ, இடி முழக்கதையல்லவா விரும்புகிறாய்...

நான் இடி நேரங்களில் பயணிப்பவன் என்பதை ஒத்துக்கொள்கிறேன் - ஆனால் சில முன்னெச்சரிக்கைகளில்லாமல் அல்ல. இங்கே! உடனே எனது மாதிரி இடி தாங்கியை பாருங்கள். ஒரு அடி ஒரு டொலர் மட்டுமே!

நான் சொல்வேன் - அது ஒரு சிறந்த கோல் என்று. ஆனால், உன்னுடைய அந்த குறிப்பிட்ட முன்னெச்சரிக்கைகள் என்ன என்ன? அதற்கு முதல் , உந்த யன்னல் கண்ணாடிகளை சாத்த விடு. சரிவாக விழும் இந்த அடை மழையால் உள்ளே நனைகிறது. அவற்றை மூட வேண்டும்.

உங்களுக்கு பித்து பிடித்து விட்டதா? அந்த இரும்பு சட்டங்கள் சிறந்த கடத்திகள் என்று அறியவில்லையா? வேண்டாம் !

சரி. நான் இந்த மரக் கதவுகளை மட்டும் பூட்டுகிறேன். பின்னர், வேலைக்கார பையனை மரச் சட்டமொன்றை எடுத்து வரச் சொல்கிறேன். தயவு செய்து, அவனை அழைக்க அந்த மணியை அடிக்கும் கம்பியை இழு!

நீங்கள் சுயநினைவில் இல்லையா? அந்த மணியடிக்கும் கம்பி உங்களை தகர்த்துவிடும்! இடி மின்னல் நேரங்களில் உலோகக் கம்பியையோ அல்லது இரும்பு மணியையோ தொட வேண்டாம்!

தேவாலயங்களிலுள்ள அந்த மணி கோபுரங்களும் அதற்கு தப்ப முடியாதா? தயவு செய்து, இப்படியான நேரங்களில் எங்கே எப்படி இருந்தால் பாதுகாப்பு என்று கூறுவாயா?
வாழ்க்கைக்கு உத்தரவாதத்துடன் இந்த வீட்டில் நான் தொடக்கூடிய இடம் என்று ஏதாவது இருக்கிறதா?

இருக்கிறது - ஆனால் நீங்கள் இப்போது நிற்கும் இடமல்ல. அந்த சுவரிலிருந்து அப்பால் செல்லுங்கள்! சிலவேளைகளில், மின்சாரம் சுவரூடாக கிழே பாயும். அந்நேரம், மனிதன் அதை விட சிறந்த கடத்தி என்பதால் - அது சுவரை விட்டுவிட்டு மனிதனூடாக பாயும். ஆ...! இந்த மின்னல் மிக அருகில் விழுந்திருக்கிறது. பந்து போன்ற ஒரு பரந்த வெளிச்சம்!
**********
அனேகமாக! உனது கருத்துப்படி, இந்த வீட்டில் மிக பாதுகாப்பான இடமெது என்று உடனே சொல்?

இந்த அறைதான். இதோ நான் நிற்கும் இந்த புள்ளி தான் அப்படியான இடம்! இங்கே வாருங்கள்.

முதலில் அதற்கான காரணத்தைச் சொல்லு...

ஆ! ஒரு மின்னலின் பிறகான கடுமையான காற்று... இந்த வீடு ... வீட்டில்... இங்கே வாருங்கள்!

தயவு செய்து, நான் காரணம் கேட்டேன்...!

இங்கே என்னருகில் வாருங்கள்...!

மீண்டும் எனது நன்றிகள்! நான் எனது பழைய இடமான சூட்டடுப்பின் அருகிலேயே நின்று கொள்கிறேன். இப்பொழுது, இடி-தாங்கி மனிதரே, இடிகளற்ற இந்த கணத்தில் - இதற்கான விடையை தர முடியுமா: ஏன் இந்த அறை தான் பாதுகாப்பானதும் அதுவும் நீங்கள் நிற்கும் அந்த புள்ளிதான் மிகச்சிறந்த இடமென்றும்...?

புயலும் இடியும் தற்காலிகமாக ஓய்ந்திருந்தது. இடிதாங்கி மனிதன் சற்று ஆறுதலாக இருந்தான். அவன் கூறினான்:

"உங்களது வீடு ஒரே ஒரு மாடி கொண்டது; இதனுடன் நிலக்கீழ் சேமிப்பறையும் கூரையின் கீழே சிறிய சேமிப்பறையும் உள்ளடக்கியது. இந்த அறை இரண்டுக்கும் இடையில். அதனால் மற்ற இடங்களுடன் ஒப்பிடும் போது பாதுகாப்பானது. ஏனென்றால், மின்னல் சிலவேளைகளில் முகில்களிலிருந்து நிலத்திற்கும் சிலவேளை நிலத்திலிருந்து முகிலுக்கும் பாயும். விளங்குகிறதா? இந்த நடு அறையை நான் தெரிவு செய்யக் காரணம், ஒருவேளை மின்னல் இந்த வீட்டைத் தாக்கினால் - அது புகைபோக்கி வழியாகவோ அல்லது சுவர் வழியாகவோ வரும். அதனால் இந்த இடங்களில் இருந்து விலகி செல்ல செல்ல பாதுகாப்பு அதிகம்! இப்பொழுதாவது அருகே வாருங்கள்... "

இப்போது. நீ தற்போது கூறிய ஒரு விடயம், எனக்குள் பயத்தை அதிகரிக்காமல், நம்பிக்கையை வளர்த்திருக்கிறது...!

அப்படி என்ன கூறிவிட்டேன்...?

சிலவேளைகளில் மின்னல் நிலத்திலிருந்து முகிலுக்கு பாய்வதாக கூறினாயே !

அதுவா! 'மீள-திரும்பும் மின்னல்' (Returning stroke) என்று அதை கூறுவார்கள். பூமியானது, குறிப்பிட்ட அந்த பதார்த்தத்தால் மிகையாக நிரம்பும்போது, அந்த மிகையை மேல்நோக்கி அனுப்பும்.

ஆகா, மீளத்திரும்பும் மின்னல். மிக்க நல்லது...
அதற்கு முதல், இங்கே வந்து கொஞ்சம் குளிர் காய்ந்து கொள்!

எனக்கு இங்கே ஒரு பிரச்சனையும் இல்லை. நனைந்து இருப்பதுதான் நன்று.

எப்படி...?

நீங்கள் செய்யக்கூடிய நல்ல விடயம் அதுதான் - இடி மின்னல் நேரத்தில் முழுவதுமாக நனைவது. எங்களின் உடலைவிட நனைந்த உடையானது சிறந்த கடத்தி. ஆகவே, மின்னல் எங்களில் விழுந்தால் - உடலை தாக்காது எங்களின் உடை வழியே கீழே சென்று விடும். ஆ, புயல் மீண்டும் அதிகமாகிறதே! உங்களிடம் கால்மிதி ஒன்று இருக்கிறதா? அவைகள் மின்னை கடத்துவதில்லை. அதில் ஒன்றை தந்தால், நான் அதில் நின்று கொள்ளலாம் - ஏன் நீங்களும் கூட... நன்றாக இருள்கிறது. நண்பகல் நேரமே மாலை போல இருள்...! அந்த கால்மிதி ஒன்று தயவு செய்து !

நான் ஒன்றை கொடுத்தேன். அந்த மலைகள் என் குடிசைக்குள் விழுவது போல இருந்தது.

"இப்போதைக்கு, நாங்கள் பேசாமல் இருந்து பயனில்ல" என்றேன் நான். எனக்கு, இடி மின்னல் நேரங்களில் வெளியே பயணம் செய்ய முன்னெச்சரிக்கைகளை சொல்ல முடியுமா...? என்றேன்.

பொறுங்கள் - இந்த இடியும் அடங்கட்டும்...!

இல்லையில்லை, முன்னெச்சரிக்கைகளை கூறு. உனது கருத்துப்படி நீதான் மிகப் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாயே? சொல்...

“அப்படியானால் சுருக்கமாக. பைன் மரங்களையும், உயரமான வீடுகளையும், தனித்திருக்கும் பண்ணை வீடுகளையும், உயர்ந்த நில புல்வெளிகளையும், ஆடு மாடு மந்தைகளையும், மக்கள் கூட்டத்தையும் நான் தவிர்ப்பேன். இன்று போல் நடந்து செல்வதானால், நான் வேகமாக நடப்பதில்லை. வாகனத்தில் போகும் போது, நான் அதன் பக்கங்களையோ பின்பக்கத்தையோ தொடுவதில்லை. குதிரையில் சென்றால், நான் இறங்கி குதிரையை நடத்தி செல்வேன். எல்லாவற்றுக்கும் மேலாக, உயரமான மனிதருக்கு அருகில் செல்வதில்லை.”

நான் காண்பது கனவா...? மனிதரே மனிதர்களை தவிர்ப்பதா? அதுவும் ஆபத்தான தருணங்களிலும்...?

*********************************************************************************************
ஒரு சிறு பகுதி மட்டுமே எஞ்சியுள்ளது. அதை தருவதா இல்லையா என்பது தான் எனது யோசனை. சிலர் குஉருவார்கள் - கதையின் முடிவு இல்லாவிட்டால் தான் அது இனிமையாக இருக்குமென்று...

நன்றி+

ஞாயிறு, 7 ஜூன், 2009

ஏ பாடல் ஒன்று ... 1

திரைப்படம் : அக்னி நட்சத்திரம்
பாடல் : கே. ஜே. ஜேசுதாஸ்
, சித்ரா
நடிகர்கள்: கார்த்திக் , நிரோஷா , பிரபு, அமலா
இசை: இசைஞானி இளையராஜா

இதோ
சில இனிமையான வரிகள் ...

கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்

கானலல்ல காதல் என்னும் காவியம்

அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்

பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்

காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்

நெஞ்சமானது உந்தன் தஞ்சம் ஆனது

காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்

நெஞ்சமானது உந்தன் தஞ்சம் ஆனது

உன் தோளில் தானே பூமாலை நானே

சூடாமல் போனால் வாடாதோ மானே

இதயம் முழுதும் எனது வசம்





வா வா அன்பே அன்பே

காதல் நெஞ்சே நெஞ்சே

உன் வண்ணம் உன் எண்ணம்

எல்லாமே என் சொந்தம்

இதயம் முழுதும் எனது வசம்...

செவ்வாய், 2 ஜூன், 2009

வயசு கோளாறு

நானும் என் நண்பனும் பல பல விடயங்களை பற்றி உரையாடுவது வழக்கம். சில வேளைகளில் அவன் கேள்விகள்அலுப்பு தட்டும். இந்த வகையில் ஒரு நாள் திடீரென அவன் கேட்டான்.















வலது : சராசரி பெண்ணின் முகம் , 64 பெண்களின் முகங்களிலிருந்து;
இடது: சராசரி ஆணின் முகம், 32 ஆண்களின் முகங்களிலிருந்து;

"ஒருவனுடைய்/ ஒருத்தியின் வயதை எதை எதை வைத்து நாம் எடை போடுகிறோம் என்பது?"

முழு கட்டுரையை வாசிக்க இங்கே அழுத்தவும்

முதலில் இலகுவான கேள்வியாக தெரிந்தாலும் அது அப்படியான ஒரு கேள்வியல்ல என்பது மெல்ல மெல்ல புரிந்தது. இதிலே நான் சொல்ல வருவது அவனோ அல்லது நானோ அறிவாளி என்பதையல்ல.

வன் கூட சில வேளை அப்படி நினைத்து கேட்டிருக்க மாட்டான்.

உண்மையில் நவ்வென கமரா களில் பயன்படுத்தும் image processing தொழில் நுட்பங்களில் ஒன்று face detection எனும் அம்சம். அடுத்தது red eye reduction எனும் கண்களில் தோன்றும் சிவப்பு புள்ளிகளை நீக்குவது. ஆனால் ஒருவரின் வயதை அவரது முகத்திலிருந்து கணினி மூலம் கண்டறிவது எப்படி?

சரி, இவ்வளவு ஏன்? மனிதர்களாகிய நாம் எவ்வாறு செய்கிறோம்...?

அது மிகவும் சிக்கலானது...

எனது எண்ணத்தில் தோன்றிய வற்றை சொல்கிறேன்.











  1. வளர்ந்தவர்களை விட சிறுவருக்கு முகத் தோலின் கீழ் கொழுப்பு அதிகம். சிறு குழ்ந்தைகளின் முகத்தில் இத்தனை நன்றாக அவதானிக்கலாம்.
  2. வயது செல்ல செல்ல கண்ணில் கரு வளையம், தோல் சுருக்கம் ஆகியன தோன்றும்.
இப்படியாக காரணங்களை சொன்னாலும், சாதாரண மனிதர்களால் இருபது வயது ஆளுக்கும் முப்பத்தைந்து வயது ஆளுக்குமான வித்தியாசத்தை இலகுவாக இனம் காண முடியுமே...!

வியாழன், 7 மே, 2009

தொ. நுட்பம் -1


இவரைப் பற்றி பலருக்கு தெரியாதிருக்கலாம்...

ஆனால்,
இவரது கண்டுபிடிப்புகளாக wikipedia சொல்லுவது ஆங்கிலத்தில் இதோ,

*************************************************************************************
Electromechanical devices and principles developed by Nikola Tesla:

* Various devices that use rotating magnetic fields (1882)
* The Induction motor, rotary transformers, and "high" frequency alternators
* The Tesla coil,his magnifying transmitter, & other means for increasing the
intensity of electrical oscillations (including condenser discharge
transformations and the Tesla oscillators
* Alternating current long-distance electrical transmission system (1888) and
other methods and devices for power transmission
* Systems for wireless communication (prior art for the invention of radio) and
radio frequency oscillators
* Robotics and the "AND" logic gate
* Electrotherapy Tesla currents
* Wireless transfer of electricity and the Tesla effect
* Tesla impedance phenonomena
* Tesla electro-static field
* Tesla principle
* Bifilar coil
* Telegeodynamics
* Tesla insulation
* Tesla impulses
* Tesla frequencies
* Tesla discharge
* Forms of commutators and methods of regulating third brushes
* Tesla turbines (eg., bladeless turbines) for water, steam and gas
and the Tesla pumps
* Tesla igniter
* Corona discharge ozone generator
* Tesla compressor
* X-rays Tubes using the Bremsstrahlung process
* Devices for ionized gases and "Hot Saint Elmo's Fire"
* Devices for high field emission
* Devices for charged particle beams
* Phantom streaming devices
* Arc light systems
* Methods for providing extremely low level of resistance to the
passage of electrical current (predecessor to superconductivity)
* Voltage multiplication circuitry
* Devices for high voltage discharges
* Devices for lightning protection
* VTOL aircraft
* Dynamic theory of gravity
* Concepts for electric vehicles
* Polyphase systems
********************************************************************************

புதன், 6 மே, 2009

அழகான ஆங்கில நூல்கள் - 1

இனியவை சில இதோ ...

1. James Hadley Chase பிரபல்யமானது Suspense thriller novels மூலம்











2. Sir Arthur Conan Doyle பிரபல்யமானது Sherlock Holmes இன் துப்பறியும் கதைகள் மூலம்










3. R K Narayan பிரபல்யமானது Malgudi Days, Swami & Friends போன்ற நாவல்கள் மூலம்














4. Goscinni & Uderzo பிரபல்யமானது Asterix & Obelix Cartoons மூலம்











5. Herge பிரபல்யமானது ‘Adventures of TinTin’ Cartoons மூலம்



ஒரு துளி கவிதை -1



தபூசங்கர் கவித் துளி ஒன்று:

எதைக் கேட்டாலும்
வெட்கத்தை பதிலாக தரும் நீ
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?

(தேவதைகளின் தேவதை கவிதைத் தொகுப்பிலிருந்து...)





திங்கள், 20 ஏப்ரல், 2009

கணினிக்குள் கண்ணோட்டம் - 1


எம் அன்றாட வாழ்க்கையில் கணினி என்பது ஒரு அடிப்படைத் தேவை ஆகி விட்டது. எல்லோரும் Palmtop, Laptop, Desktop என விதம் விதமாக பேசினாலும் அதனை Master (இலகுவாக கையாளுதல் ) செய்வதற்கு நீண்ட அனுபவமும் சிறிது more than averge IQ (?) வும் தேவை என்பது தான் உண்மை...

இப்போது Desktop கணினி எனப்படுகிற PC பற்றி சிறிது அலசுவோம்.

1. Task Manager:
Ctrl+Alt+Del Keys
இனை அழுத்தி பெறும் இதனை Taskbar Right Click மூலமும் பெற முடியும்.

இது அக்கணத்தில் செயல்படும் Applications, Processes, Perfromance என அவசியமான தகவல்களை தரும். முக்கியமான விடயம் - taskmgr.exe என்ற process இனையும் அது காட்டுவது...

இதில் இரண்டாவது Processes Tab பற்றி நாம் தெளிவாக அறிந்திருக்க வேண்டியது கட்டாயம். ஒரு application crash ஆகும் போது நாம் இரண்டாவது Tab சென்று அந்த application இற்குரிய Process ஐ நிறுத்தினால் நீல நிற திரை வருவதையும் நேர விரயத்தையும் தவிர்க்கலாம்.

இது அதிகமாக உதவுவது potential virus/worm ஒன்றை அறிவதற்கு. virus/worm ஒன்று application tab இல் இருப்பதில்லை, ஆனால் Processes Tab இல் இருக்கும். இதற்க்கு நீங்கள் உங்களது கணினியில் செயல்படும் Processes/Programs/Drivers

உபயோகமான சில கட்டளைகள் இதோ:

start - run - msconfig (MS configuration) - இதன் மூலம் கணினி ஒன்றின் தொடங்கு நிலை program களையும் run ஆகிக் கொண்டிருக்கும் services இனையும் அவதானிக்க உதவும்.



start - run - dxdiag (directx diagnosis) - கணினி ஒன்றின் வன்பொருள் configuration ஐ காட்டும்.

start – run - regedit (registry edit) - இது வின்டோசின் configuration களை சேமித்து வைத்திருக்கும்.

குறிப்பாக, control panel இலுள்ள சகல வேலைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட run கட்டளை உண்டு. இதை நீங்கள் சாதாரண்மாக பார்க்க முடியாது...

இதனை விட கணினியின் maintenance இற்கு உதவியான சில கட்டளைகள் :
Disk defragmenter & Disk cleanup: காலத்துக்கு காலம் இதனைச் செய்தால் கணினியின் செயல்திறனை அதிகரிக்கலாம்.

இதற்கான பாதை இதோ,
Start – All programs – Accessories – System tools

மீதி அடுத்து ...

திங்கள், 13 ஏப்ரல், 2009

ஹொலிவூட் பொக்கிசங்கள் - 1

சுருக்கமான படக் குறிப்புகள். வில்லு, போக்கிரி போன்ற அரிய திரை பொக்கிஷங்களை பார்த்த ரசிகருக்கு இது சில வேலை போரடிக்க இடமுண்டு. விரிவான விமரிசனத்துக்கு இடமுண்டு.

* படத்தின் தரத்துக்கும் ஒழுங்குக்கும் ஒரு தொடர்புமில்லை
* திரைமயப்படுத்திய உண்மை சம்பவம் என்று இங்கு கருதப்படுபவை Documentary Drama எனப்படுபவை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது


1. The Beautiful Mind (தெரிகிற Russel Crowe, பொது உண்மை சம்பவம் - நோபெல் பரிசு பெற்ற அறிஞரை பற்றியது )





















2. The Pianist (
திரைமயப்படுத்திய் உண்மை சம்பவம் - ஒரு ஜேர்மன் இராணுவ வீரன் யூத kalainaanukku உதவியது )





















3. The Psycho ( இயக்கம் Alfred Hitchcock, திகில்- 1970 களை கலக்கிய மர்மத் திகில் )






















4. My Fair Lady (காதல்- ஒரு அடிமட்டப் பெண்ணுக்கு எப்படி பண்பாடான Lady ஆகலாம் என்பதை சொல்லுவது )






















5. The Patriot (திரைமயப்படுத்திய உண்மை சம்பவம்- scotland விடுதலை வீரனை patri)




















6. Million Dollar Baby (
இயக்கம் Clint East, குத்துச்சண்டை வீராங்கனை பற்றி )





















7. The Godfather 1 (
நடிகர் Marlon Brando - மாபியா கும்பலின் தோற்றம் பற்றி )





















8. Ratatouille (அனிமேஷன்- எலி கூட Chef ஆகலாம் என்றது )





















9. Enter the Dragon (
நடிகர் Bruce லீ, பழி வாங்கும் படலம் )





















10. Artificial Intelligence (சுருக்கம் A.I. ,
இயக்கம் Steven Spielberg - ரோபோக்களின் எதிர்காலத்துடன் தாய்ப்பாசத்தை கலப்பது )




















11. Flags of Our Fathers
(இயக்கம் Clint Eastwood - அமெரிக்க தேசியக் கொடியின் உண்மையான மதிப்பை பற்றி )






















12. Life is Beautiful (
திரைமயப்படுத்திய உண்மை சம்பவம், இத்தாலிய- உலக யுத்ததில் யூத தந்தையின் அவலம் பற்றி )




















13. English Patient (
வேற்று நாட்டில் விபத்துக்கு உள்ளாகும் vaanodyin uNmai therikira pothu )





















14. The Green Mile (
நடிகர் Tom Hanks - மரண தண்டனையின் கசப்பு பற்றி )





















15. Forrest Gump (
நடிகர் Tom Hanks)






















16. Saving Private Ryan (இயக்கம் Steven Spielberg - சாதரண அமெரிக்க வீரன் ஒருவனை உலக யுத்தத்தில் காப்பாற்றுவது பற்றி )






















17. The Reader (நடிகை Kate Winslet - வாசிப்பை அதிகம் விரும்பும் ஜேர்மன் பெண் ஒருத்தியின் மறுபக்கம் )