சனி, 12 செப்டம்பர், 2009

What you see is NOT what you get

எனக்கு தெரிந்த தமிழில் இதனை இப்படி சொல்லலாம்:
நீங்கள் பார்ப்பது வேறு; பெறுவது வேறு;

WYSIWIG என்ற சொல் உண்மையில் GUI மற்றும் Printing தொழில்நுட்பம் சம்பந்தமானது.
முன்னர் நாம் கணினி திரையில் காண்பது வேறு , தாளில் பெறுவது வேறு என்பதாக இருந்தது. பின்னர் அது மாறி கிடைத்தது தான் WYSIWYG. ( விசிவிக் என்று வாசிக்க )

ஆனால் இப்போது இங்கு சொல்ல போவது அதுவல்ல. சில தொழில்நுட்பங்களின் உதவியால் நாம் எல்லாவற்றையும் இலகுவாக கருதி விடுகிறோம். ஆனால் உண்மையாக நடப்பதோ எம்மால் முடியாத, கடினமான ஒன்றாகத் தான் இருக்கும். என்ன, ஒன்றும் புரியவில்லையா?

இதற்கு மிக மிக சிறந்த உதாரணம்:
கிரிகெட் விளையாட்டில் LBW (கால் விக்கெட்டின் முன்னால்) out என்பது மிக மிக கடினமான தீர்ப்புகளில் ஒன்றாகும். அதாவது , Hawk Eye எனும் எதிர்வுகூறும் நுட்பம் மூலம் காலில் பட்ட பந்தின் மறைக்கப் பட்ட பாதை எதுவாக இருக்கும் என்பதுடன் மட்டும் கணினியின் கடமை முடிந்து விடுகிறது. அதற்கு மேலும் சென்று , extrapolation algorithm களை தருவிக்க முடியாது என்பதல்ல கேள்வி. அதை நம்ப முடியுமா?

ஏன் என்றால் , LBW out என்பது மிக சிக்கலான மனித மதிப்பீடுகளை உள்ளடக்கியது. அவை சில:
* leg stump இற்கு அப்பால் பந்து விழுந்தால் LBW இல்லை
* off stump இற்கு அப்பால் விழ முடியும்
* batsman move பண்ணுவதை கவனிக்க வேண்டும்
* முழங்கால் இற்கு மேல் என்றால் LBW இல்லை
* batsman play பண்ண எத்தனித்திருந்தால் அதற்கு compensate செய்ய வேண்டும்
* இப்படியே செல்லும் ...

ஆனால் கதிரையில் இருந்து கடலை சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் எங்களுக்கு இது ஒரு ஈசி வேலை. ஒன்று Instant Replay வசதி; umpire என்றால் இரண்டாம் தரம் பார்க்க முடியாது.

Umpire's view













TV viewer's perspective













இரண்டாவது , இந்த கட்டுரையின் முக்கிய அம்சம்;
umpire நின்று பார்க்கும் view வேறு; நாங்கள் TV இல் பார்க்கும் view வேறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக