செவ்வாய், 2 ஜூன், 2009

வயசு கோளாறு

நானும் என் நண்பனும் பல பல விடயங்களை பற்றி உரையாடுவது வழக்கம். சில வேளைகளில் அவன் கேள்விகள்அலுப்பு தட்டும். இந்த வகையில் ஒரு நாள் திடீரென அவன் கேட்டான்.















வலது : சராசரி பெண்ணின் முகம் , 64 பெண்களின் முகங்களிலிருந்து;
இடது: சராசரி ஆணின் முகம், 32 ஆண்களின் முகங்களிலிருந்து;

"ஒருவனுடைய்/ ஒருத்தியின் வயதை எதை எதை வைத்து நாம் எடை போடுகிறோம் என்பது?"

முழு கட்டுரையை வாசிக்க இங்கே அழுத்தவும்

முதலில் இலகுவான கேள்வியாக தெரிந்தாலும் அது அப்படியான ஒரு கேள்வியல்ல என்பது மெல்ல மெல்ல புரிந்தது. இதிலே நான் சொல்ல வருவது அவனோ அல்லது நானோ அறிவாளி என்பதையல்ல.

வன் கூட சில வேளை அப்படி நினைத்து கேட்டிருக்க மாட்டான்.

உண்மையில் நவ்வென கமரா களில் பயன்படுத்தும் image processing தொழில் நுட்பங்களில் ஒன்று face detection எனும் அம்சம். அடுத்தது red eye reduction எனும் கண்களில் தோன்றும் சிவப்பு புள்ளிகளை நீக்குவது. ஆனால் ஒருவரின் வயதை அவரது முகத்திலிருந்து கணினி மூலம் கண்டறிவது எப்படி?

சரி, இவ்வளவு ஏன்? மனிதர்களாகிய நாம் எவ்வாறு செய்கிறோம்...?

அது மிகவும் சிக்கலானது...

எனது எண்ணத்தில் தோன்றிய வற்றை சொல்கிறேன்.











  1. வளர்ந்தவர்களை விட சிறுவருக்கு முகத் தோலின் கீழ் கொழுப்பு அதிகம். சிறு குழ்ந்தைகளின் முகத்தில் இத்தனை நன்றாக அவதானிக்கலாம்.
  2. வயது செல்ல செல்ல கண்ணில் கரு வளையம், தோல் சுருக்கம் ஆகியன தோன்றும்.
இப்படியாக காரணங்களை சொன்னாலும், சாதாரண மனிதர்களால் இருபது வயது ஆளுக்கும் முப்பத்தைந்து வயது ஆளுக்குமான வித்தியாசத்தை இலகுவாக இனம் காண முடியுமே...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக