ஞாயிறு, 22 மார்ச், 2009

கோயில்களின் மறுபக்கம்


கோவில் என்றதும் எமக்கு இந்து கோயில்களோ கிறிஸ்தவ நினைவுக்கு வரும். ஆனால் எனக்கு தெரிந்த இந்து கோயில்களின் ஒரு மறுபக்கத்தை இங்கு அலசுவதற்கு ஒரு சின்ன விருப்பம்.

உண்மையில், கோயில்களில் இடம்பெறும் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏதோ ஒரு மறைமுக அர்த்தத்தை கொண்டிருக்கிறது என்பதை எம்மில் பலர் மறந்து விடுகிறோம்.

வெறுமனே கால்களை கழுவிவிட்டு அந்தணர் தரும் விபூதி, சந்தனம் பூசி, தீர்த்தத்தை அருந்துவதும் - இரு கைகளையும் மழைநீர் பிடிப்பது போல வரம் கேட்பதற்காகவும் தொடங்கப்பட்டவையல்ல கோவில்கள். நாங்கள் இரு கைகளையும் ஒன்று சேர்த்து கண்களை மூடி நிற்கும் போது, ஒரு விதமான அலைகள் எங்களிலிருந்து தோன்றுவதாக சிலர் நம்புகிறார்கள். இதற்கு பலர் உடன்படார்கள், என்றாலும் நாம் கண்ணை திறந்த நிலையில் வைப்பதற்கும் மூடிய நிலையில் வைப்பதற்கும் மூளையில் இருந்து பெறப்படும் அலை வடிவங்களின் மீடிறன்கள் (frequency) வேறுபடுவதாக நிரூபித்திருக்கிறார்கள்.

ஒளியானது பலருக்கு மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலை வழங்குவதால் தான் தீபங்கள் அதிகமாகப் பாவிக்கப்படுகின்றன. ஆனால் தீபங்களை அருகில் சென்று வணங்குவதற்கு முண்டியடிப்பது மட்டும் ஏன் என்று தெரியவில்லை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக