ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

நெடும் தொடர்கள் 2


உண்மையில் நெடும்தொடர்கள் அதன் பார்வையாளர்களின் சமூக பொருளாதார நிலைமைகளை பிரதிபலிக்கின்றதா என்றால்... அதன் விடை - "?"

அனேகமான தொடர்கள் பெண்களை மையப்படுத்துகின்றதோ இல்லையோ, அப்படி நம்ப வைக்கப்படுகிறது. கூடுதலானவை பெண்களை கதாநாயகிகளாகவும் ஆண்களை துணை-நடிகர்களாகவும் சித்தரிக்கின்றன. இதில் தப்பேதும் இல்லை என்றாலும், இவற்றின் மிகக் குறிப்பிடத்தக்கவற்றை பார்க்கலாம்:

40-45 வயதுடைய ஒரு உயர் வகுப்பை சேர்ந்த பெண் ஒருவர் வழமையாக அதிக பலம், செல்வாக்கு மற்றும் அதிகாரமுடையவராக காட்டப்படுவார். அவர் அடிதடிகளை ஒழுங்கு செய்பவராகவும், மற்ற அமைதியான குடும்ப பெண்களின் வாழ்க்கையை சீர்குலைப்பவராகவும் அமைச்சர்களை கூலியாட்களாக கொண்டுமிருப்பார். இதிலே அகப்படும் அந்த கதாநாயகி (முன்னாள் சினிமா நாயகிகள்) அந்த பெண்-வில்லியின் சதிகளிலிருந்து தப்புவதும் , இடையில் கௌரவ வேடங்களில் தோன்றும் பெண்களின்-ஓமோன் (Female Hormones)-கொண்ட ஆண்களின் தொந்தரவுகளிலிருந்து தப்புவது தான் எந்த தொடரிலும் காணக்கூடிய சிறப்பம்சம்.

நான் ஒருமுறை ஒரு வீடு சென்ற போது , அங்கிருந்த மூதாட்டி என்னை வரவேரற்றுவிட்டு - அங்கிருந்த மற்ற இளம் பெண்ணுக்கு கூறினார்: " செல்வியின்ர புருசன் வீட்ட விட்டு போனாப்பிறகு அவளுக்கு இருக்க இடமில்ல. இவள் கோசலையை பார்த்தியே, அவள வீட்ட வர வேண்டாம் என்டுட்டாள். அவளுக்கு இருந்த சொட்டு காசையும் அவளின்ட தம்பி புடுங்கிப்போட்டானே. பாவம் இவள், தற்கொலை செய்துட்டாள்." முதலில் எனக்கு விளங்காவிட்டாலும் போகப் போக எனக்கு சன் டிவி செல்விக்கும், பக்கத்து வீட்டு செல்வி அக்காவுக்கும் வித்தியாசம் புரிந்தது.

நாம் இந்த தொடர்களில் காணும் அதிசயங்களை நிசத்தில் காண்பதில்லை. கணவனின் சேட்டை பிடித்து உலுப்பும் மனைவிகளையும், அடிதடிகளை விரும்பும் பெண்களையும், சிறிய பிரச்சனைகளுக்கு அழும் ஆண்களையும், சேலையுடன் உறங்கும் நாயகிகளையும் நாங்கள் பார்த்ததில்லை.

தொடர் தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக